Palli vizhum Palan for Male | ஆண்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

By PALLI VILUM PALAN

Updated on:

Palli vizhum Palan for Male

Palli vizhum Palan for Male – ஆண்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

பல்லிகள் என்றாலே எல்லோருக்கும் ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யும் ஏனென்றால் அவர்கள் தெய்வங்களின் மறு உருவமாகவே பார்க்கப்படுகிறார்கள். நல்ல மனம் கொண்ட மனிதர்கள் வாழும் இடங்களில் மட்டுமே வாழக்கூடியவர்கள். பல்லிகளுக்கு என்று தனி குணம் உண்டு. பண்டைய காலங்களில் பல்லிகளினுடைய குணா அதிசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்காக கௌரி சாஸ்திரம் என்ற கல்விமுறையே இருந்துள்ளது. கௌரி என்பது பல்லியை குறிக்கும் வார்த்தையாகும். நாம் இந்த பதிவில் பல்லிகள் ஆண்களின் மீது விழுந்தால் அதுவும் ஆண்களின் எந்த உடல் பகுதியில் பல்லி விழுந்தால் அவற்றிற்கு என்ன பலன் என்பனவற்றை விரிவாக பார்க்கலாம்.

ஆண்களின் தலைப் பகுதியில் பல்லி விழுந்தால் ? – Lizard Falling On Head For Men

ஆண்களின் தலைப்பகுதியில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் அல்லது எதிர்மறையான விளைவுகள் எச்சரிக்கையாக அதாவது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

ஆண்களின் உச்சந்தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்:

ஆண்களின் உச்சந்தலையில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அடுத்து வரும் நாட்கள் இருக்கப் போவதை உணர்த்தலாம் அல்லது அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்களுக்கு ஏதேனும் விபரீதங்கள் நிகழலாம்.

ஆணின் முகப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On the Face For Men

முகப்பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத அளவு தன லாபம் பணவரவு செல்வ வளம் கூடும் என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

Palli vizhum Palan for Male

ஆண்களின் இடது கண் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On the Left Eye Tamil For Men

இடது கண்ணில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் மகிழ்ச்சிகரமான செய்திகள் அவரைத் தேடி வரப்போகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆண்களின் வலது கண் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard falls on Right Eyes For Men

வலது கண்ணில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் புதிதாக அவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அவர்களுக்கு தோல்வியை தரலாம். இதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கு குலதெய்வத்தை வழிபடலாம்.

ஆண்களின் முன் நெற்றிப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard falls on Forehead For Men

நெற்றிப் பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் பொதுவாகவே குடும்பத்திலிருந்து அவர்களை கொஞ்ச நாளுக்கு பிரித்து வைத்திருக்கும் அதாவது மனைவி மக்களை விட்டு சிறிது காலம் பிரிந்து வாழ கூடும்.

ஆண்களுடைய இடது காது பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? What is the benefit if a lizard falls on the left Ear For Men?

இடது காது பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் செல்வ வளம் பெருகும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அதன் மூலமாக வீட்டில் செல்வம் தங்கும் வளரும்.

ஆண்களுடைய மேல் உதட்டுப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Upper lip Effect For Men

மேல் உதட்டில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்களுக்கு சண்டை, சச்சரவு, குழப்பம், விரக்தி, கைகலப்பு வரை சென்று அதிலிருந்து அவர்கள் மீண்டு வர வாய்ப்புகள் உள்ளது.

ஆண்களுடைய கீழ் உதட்டுப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Lower lip Effect For Men

ஆண்களுக்கு கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு காரிய தடை நீங்கும். ஏதேனும் செய்ய விரும்பி செய்யாமல் விட்டிருந்த செயல்களை மீண்டும் தொடங்கலாம் அது வெற்றியில் முடியும்.

ஆண்களின் உதட்டுப் பகுதிகளில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On lips Effect For Men

பொதுவாக இரு இதழ்களின் மீதும் பல்லி ஆனது ஆண்களுக்கு விழுந்தால் அவர்களைத் தேடி அவரது தூரத்து உறவினர்களோ அல்லது  தெரிந்தவர்களுடைய மரண செய்தி வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

ஆண்களுடைய வாயில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Mouth For Men

வாய்ப்பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். இது போன்ற நேரங்களில் மருவத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

ஆண்களின் முதுகு பகுதியின் இடப்புறம் பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On Back Benefits For Men

முதுகு பகுதியில் இடதுபுறத்தில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல மற்றும் மகிழ்ச்சியான அல்லது வெற்றி செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆண்களின் மணிக்கட்டில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Wrist Benefits For Men

மணிக்கட்டு பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்கள் தங்களுடைய உடல் அல்லது அவர்களுடைய வீட்டை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

ஆண்களின் கைப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On Hands Benefits For Men

கைகளில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் பொருட்செலவு அல்லது பெரிய வியாபாரங்கள் பெருத்த நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆண்களின் விரலில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Fingers Benefits For Men

விரல் பகுதியில் ஆண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்கள் பழைய அழகான நினைவுகளை எல்லாம் நினைவு கூறி அவற்றின் மூலம் மகிழ்ச்சியை உருவாக்குவார்கள். பள்ளி கால நண்பர்கள் கல்லூரி கால நண்பர்கள் இவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆண்களின் இடது கை பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Left Hands Benefits For Men

கைகளில் பல்லி விழுந்தாலே அது அவர்களுக்கு ஏதோ ஒரு எதிர்மறையான நிகழ்வுகளைக் கொடுக்கும். இடது கையில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு அவமரியாதைகள் கிடைக்கலாம்.

ஆண்களின் வலது கை பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Right Arm For Men

எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்று கூறுவது போல வீண் பிரச்சனைகளை உங்கள் தலையில் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஆண்களின் மீசையின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On Mustache Benefits For Men

உங்களுக்கு நீங்களே கணிக்க முடியாத அளவிற்கு ஏதோ ஒரு எதிர்பாராத பிரச்சனைகள் வரப்போகிறது என்பதே உங்கள் மீசையின் மீது பல்லி விழுவதற்கான காரணமாகும்.

ஆண்களின் பாதத்தின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? Lizard Falling On the foot Benefits For Men

இவ்வளவு நாள் பட்டுக் கொண்டிருந்த கஷ்டங்களில் இருந்து நீங்கி வாழ்க்கை வளப்படுவதற்கான அனைத்து விதமான வாய்ப்புகளையும் வழங்க போகிறது என்பதே அவர்களின் பாதங்களின் மீது பல்லி விழுவதற்கான காரணமாகும்.

ஆண்களின் பின்னங் காலின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On Carp leg Benefits For Men

வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும் உங்கள் பின்னங்கால்களின் மீது பல்லி விழுந்தால்.

ஆண்களின் கால் விரல்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?- Lizard Falling On the toes Benefits For Men

உடல் ரீதியான பிரச்சனைகள் அனாவசியமான மருத்துவச் செலவுகள் உடல் உபாதைகள் மன அழுத்தங்கள் போன்றவை ஆண்களின் கால் விரல்களில் பல்லி விழுந்தால் நடைபெறக்கூடிய அறிகுறிகள் ஆகும்.

பொதுவாகவே பல்லிகளை பார்த்து யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவை நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு நல்ல தெய்வ அறிகுறிகளைக் கொண்டது ஆகும். எனவே பல்லிகளை பார்த்து நாம் அஞ்ச வேண்டிய கட்டாயம் இல்லை. பல்லிகளைத் தெய்வங்களாக நாம் வழிபடலாம்.

PALLI VILUM PALAN