• பல்லி விழும் பலன் (PALLI VILUM PALAN) என்பது உண்மைதான். பல்லி விழும் பலனை பற்றி கௌரி பஞ்சாங்கம் மற்றும் பண்டைய கால சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. பல்லி விழுந்தால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள். உங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
  • பல்லி விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் அதன் பலன்கள் தொடர்ந்து இருக்கும்.
  • பல்லி விழும் பலன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும். இதில் எந்த வேறுபாடும் கிடையாது.

உங்களுக்கு தெரியுமா ? பண்டைய காலத்தில் பல்லியை பற்றி ஒரு தனி படிப்பே இருந்தது. அதுதான் கௌரி சாஸ்திரம்.

கடவுள் மனிதனோடு பேசுவதற்கு பல வழிகளை வைத்துள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கடவுள் ஒரு சில நேரங்களில் ஒரு சில தகவல்களை நமக்குக் குறிப்பால் உணர்த்துவார். அந்த வகையில் இந்தப் பல்லியும் ஒன்றாக கருதப்படுகிறது.

பல்லிக்கு ஒரு சில சக்திகள் இருக்கின்றன. அதனாலயே காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலும் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலிலும் பல்லியின் உருவங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் பல்லியை தெய்வமாக வணங்குகின்றனர்.

பல்லி என்பது நவகிரகங்களில் கேது பகவானை குறிக்கிறது. பல்லி சத்தமிடுவது முதல் அது நம் உடலில் எங்கே வந்து விழுகிறது என்பது வரை அதன் செயல்கள் ஒவ்வொன்றும் பல முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

பல்லி விழும் பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா Palli Vilum Palan in Tamil
PALLI VILUM PALAN

தலையில் பல்லி விழுவது அபசகுனம். தலையில் பல்லி விழுந்தால் குடும்பத்தில் சண்டை, கலகம் போன்றவைகள் ஏற்படும். அன்றைய தினத்தில் கவனமாக இருப்பது நல்லது.

முகம், நெற்றி, கூந்தல், குடுமி போன்ற இடங்களில் பல்லி விழுந்தால் நல்ல சகுனம். இதனால் சுகம், பட்டாபிஷேகம், லாபம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.

மூக்கு, சிரசு, வலது இடது புருவ மத்தியில் பல்லி விழுவது அபசகுனம். இதனால் பிள்ளைகளுக்கு பிரச்சனை, வியாதி, கண்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.

வலது கண், இடது கண், வலது கபாலம், இடது கபாலம், வலது புருவம், இடது புருவம் இவற்றில் பல்லி விழுவது நல்ல சகுனம். ராஜ அனுக்கிரகம், அன்பு, சுகம், சகல சம்பத்து,கட்டுப்படுதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.

மூக்கின் நுனிப்பகுதி, வாய், மேவாய்கட்டை, மேல் உதடு இவற்றில் பல்லி விழுவது அபசகுனம். இதனால் பொருள் விரையம், பயம், விசனம், ராஜ தண்டனைகள் போன்ற தீய பலன்கள் ஏற்படும்.

வலது புஜம், இடது புஜம், வலது காது, இடது காது, கழுத்துப் பகுதி, கீழ் உதடு இவற்றில் பல்லி விழுவது நல்ல சகுனம். இதனால் தீர்க்காயுள், வியாபாரம் முன்னேற்றம், தன லாபம், ஆரோக்கியம், ஸ்திரீ சுகம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.

வலது கை, இடது கை, வலது மணிக்கட்டு, இடது கைவிரல், இடது விலா எலும்பு இவற்றில் பல்லி விழுவது அபசகுனம். துக்கம், துயரம், பீடை, கண்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.

மார்பு, தேகம், இருதயம், வலது கைவிரல், இடது மணிக்கட்டு இவற்றில் பல்லி விழுவது நல்ல சகுனம். தீர்க்காயுள், சௌபாக்கியம், தன லாபம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.

முதுகுப் பகுதி, வலது இடது மார்பு ஸ்தானங்கள், வலது இடது தொடை பகுதிகள், ஆண்குறி இவற்றில் பல்லி விழுவது அபசகுனம். தரித்திரம், தந்தைக்கு கண்டம், நாசம், பாப சம்பவம் போன்ற தீய பலன்கள் ஏற்படும்.

வலது இடது கணுக்கால் பகுதி, வலது இடது அபானம், வலது இடது பாதங்கள், வலது இடது முழங்கால்கள், வயிறு, வலது விலா எலும்பு இவற்றில் பல்லி விழுவது நல்ல சகுனம். தீர்க்காயுள், தனலாபம், தானிய லாபம், சுகம், ரத்தின லாபம், பிரயாணம், சுபம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.

வலது கால் விரல் நகங்கள், இடது கால் விரல் நகங்கள், வலது பாதம், இடது பாதம், வலது பாத விரல்கள், இடது பாத விரல்கள் இவற்றில் பல்லி விழுவது அபசகுனம். இதனால் ராஜ பயம், தன நாசம், துக்கம், துயரம், பயம், நோய் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.

  • பல்லி விழும் பலனில் கீர்த்தி என குறிப்பிடுவது புகழ் மற்றும் செல்வத்தைக் குறிக்கும்.
  • போகத்திற்கு காரகன் ராகு பகவான் ஆவார். அதாவது போகம் என்பது இன்பமாகும். இது நமது ஆசை மற்றும் அதீத ஆசைகள் பற்றி குறிப்பிடுவது.

Palli Vilum Palan

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் இருப்பதாக பழைய சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

நண்பர்களே தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே நீங்கள் தலைக்கு குளித்துவிட்டு உங்களது இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.

உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

அப்படி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜை அறையிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

உங்களது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது நன்மை பயக்கும்.

நண்பர்களே, உங்களால் முடிந்தால் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அல்லது திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சென்று பல்லியை வழிபாடு செய்யலாம். அப்படி உங்களால் போக முடியவில்லை எனில் உங்களது மனதில் பல்லியை நினைத்து வழிபடலாம்.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கர்ப்ப கிரகத்தின் மேல் கூரையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லி உருவங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த பல்லியை நினைத்து வழிபடுவது நல்லது.

அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலிலும் இருக்கின்ற பல்லியை நினைத்து வழிபடுவது நல்லது.

மேற்கண்ட பரிகாரங்களை நீங்கள் செய்யும் பட்சத்தில் பல்லி விழுந்தால் ஏற்படும் தீமைகள் அல்லது தோஷத்திலிருந்து நீங்கள் விடுபடலாம்.

கிழக்கு திசையில் ➨ வீட்டின் கிழக்கு பகுதியில் பல்லி சத்தம் போட்டால் ராகு கிரகத்தின் தன்மை என்று பொருள். இது வீட்டிற்கு நல்லதல்ல. இதனால் நம் மனதில் பயம், கெட்ட செய்திகள் வரக்கூடும்.

தென்கிழக்கு திசையில் ➨ தென்கிழக்கு பகுதியில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதாவது பிரச்சனை அல்லது கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அர்த்தம். ஒரு சில நாட்களில் கெட்ட செய்திகள் வரலாம் என்று அர்த்தம்.

வடக்கு திசையில் ➨ பல்லி சத்தம் போட்டால் சுப காரியங்கள் நடக்கும். உங்களது வீட்டிற்கு நல்ல செய்திகள் வரும் என்பது அர்த்தம்.

தென்மேற்கு திசையில் ➨ தென்மேற்கு பகுதியில் பல்லி சத்தம் போட்டால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது அர்த்தம். உங்களுக்கு லாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

palli vilum palangal

Leave a Comment