எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

By PALLI VILUM PALAN

Updated on:

நம் தமிழ் மரபின்படி பல்லிகள் தெய்வங்களாகவும் பார்க்கப்படுகிறது சில கோவில்களில் பல்லிகளுக்கு என்று சிலைகள் வைத்து வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. பண்டைய தமிழர் நாகரீகத்தில் பல்லிகளின் சத்தத்திற்கு பலன்கள் குறித்து ஒரு படிப்பு முறையே இருந்துள்ளது. அதற்குப் பெயர் கௌரி சாஸ்திரம் என்று அழைக்கப்பட்டது. பல்லிகளின் சாஸ்திரங்களுக்காக ஒரு படிப்பே இருந்தது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. எனவேதான் பல்லிகளின் வாக்கானது நிச்சயம் பலிக்கும் என்பது இதன் மூலமாக நமக்கு தெரிய வருகிறது.

பொதுவாக பல்லிகள் சத்தமிடுவதை வைத்தும் அது ஒருவரின் உடலின் மீது விழும் பொழுது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தை பொறுத்தும் அதற்கான பலனானது சொல்லப்படுகிறது. நாம் இந்த பதிவில் ஒருவரின் உடலில் எந்தெந்த பகுதிகளில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தலையில் பல்லி விழுந்தால் பலன் என்ன

தலையில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Head)

தலையில் பல்லி விழுவது என்பது சாதாரண விஷயம் அல்ல அது உங்களுக்கு வரும் பெரும் ஆபத்தை குறிப்பதாகும். பெரும்பாலும் தலையில் பல்லி விழுந்தவர்களுக்கு ஏதேனும் மிகப்பெரிய நஷ்டமோ அல்லது இழப்போ அல்லது பெரும் பாதிப்பையோ ஏற்படுத்தியுள்ளது.

தலை முடியில் மட்டும் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling on Hair)

பல்லி ஆனது நம் தலை முடியில் மட்டும் பட்டு கீழே விழுந்தால் நல்ல பலன்களையே தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. தலையில் நேரடியாக படுவதை விடவும் முடியில் பட்டால் தோஷங்கள் ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தலை முடியில் பல்லி விழுந்தால்

நெற்றியில் பல்லி விழுந்தால் பலன் என்ன: (Lizard Falling On Top of the Head)

பல்லியானது ஒருவரின் நெற்றிப் பகுதியில் பட்டு விழுந்தால் அவர்களுக்கு சுப பலன்கள் கிட்டும் என்று எதிர்பார்க்கலாம். ஒருவரின் இடது நெற்றிப் பகுதியில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு அளவு கடந்த புகழ் கிடைக்கும் என்றும் அதுவே ஒருவரின் வலது நெற்றியில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு எதிர்பாரா செல்வம் வந்து சேரும் என்றும் அர்த்தமாகும்.

முகத்தில் பல்லி விழுந்தால் பலன் என்ன

முகத்தில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Face)

ஒருவரின் முகத்தில் பல்லியானது விழுந்தால் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களின் இல்லத்திற்கு விருந்தாளிகள் அல்லது தூரத்து உறவினர்கள் அல்லது ஏதேனும் துறவிகள் கூட வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பல்லி உணர்த்துகிறது.

புருவத்தில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Eye Brow)

உங்கள் புருவத்தின் மீது பல்லி விழுந்தால் உங்களுக்கு அரசு பதவிகள் அரசு வேலைகள் ராஜ பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து உதவிகள் என நீங்கள் எதிர்பார்க்கலாம்.

கண்களில் பல்லி விழுந்தால் பலன் என்ன?(Lizard Falling On Eye)

கண்களில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு அவர்களுடைய முந்தைய பாவங்களுக்கான தண்டனைகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கலாம்.

இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Left Hand or Left Leg)

ஒருவரின் இடது கை மற்றும் இடது காலில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி அவர்களது இல்லம் தேடி உள்ளத்தை மகிழ்விக்க வருகிறது என்று அர்த்தம் ஆகும்.

வலது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Right Hand or Right Leg)

ஒருவரின் வலது கை மற்றும் வலது காலில் பல்லியானது விழுந்தால் அவர்களது உடல்நலத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படலாம் அல்லது உடல் உபாதைகள் ஏதேனும் உண்டாகலாம். வெகு விரைவில் மருத்துவமனைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதையெல்லாம் எச்சரிக்கும் விதமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

பாதத்தில் பல்லி விழுதல் பலன்: (Lizard Falling On Foot)

பாதத்தில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு தூர தேசங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது வெளிநாடு வாழ் வாழ்க்கை, வெளிநாட்டில் வேலை போன்ற வாய்ப்புகளுக்கு அவர்களுக்கு அனுகூலம் உள்ளது என்று அர்த்தமாகும்.

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Navel)

உங்கள் தொப்புள் பகுதியில் பல்லியானது விழுந்தால் உங்களுக்கு மிக உயர்ந்த பொருட்களான தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் போன்ற மதிப்பு மிக்க பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஆனது வெகு வரைவில் கிடைக்கும் என்றும் அதற்கான நேரமாக இதை பார்க்கலாம் என்றும் அர்த்தமாகும்.

தொடையில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Thigh)

உங்கள் தொடைப் பகுதியில் பல்லியானது விழுந்தால் உங்களை குறித்து உங்களுடைய பெற்றோர் மிகவும் வருத்தப்படக்கூடிய செயல்களை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்றும் உங்களால் உங்களுடைய பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகப் போகிறார்கள் என்றும் அர்த்தமாகும்.

மார்பு மீது பல்லி விழுதல்: (Lizard Falling On Chest)

பொதுவாகவே மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு நிறைய நற்பலன்கள் ஏற்படும். அதில் இடது மார்பு வலது மார்பு என்ற வேறுபாடுகள் ஏதுமில்லை இடது பக்கம் விழுந்தாலும் வலது பக்கம் விழுந்தாலும் நல்ல பலன்கள் நிச்சயம் கிட்டும். கீர்த்தி, லாபம் என நல்ல நல்ல பலன்கள் நிச்சயம் கிட்டும்.

கழுத்தில் பல்லி விழுந்தால்: (Lizard Falling On Neck)

கழுத்தில் பல்லி விழுவது என்பது இடது வலது என்ற இடங்களைப் பொறுத்து பலன்களானது மாறுபடுகிறது இடது பக்கம் விழுந்தால் வெற்றியும் பண வரவும் கூடும் என்று அர்த்தமாகும். அதுவே வலது புறத்தில் அதாவது கழுத்தின் வலது புறத்தில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு பகையானது உண்டாகும்.

பல்லி விழுந்தால் செய்ய வேண்டியவை: (Lizard Falling Remedies)

பல்லி உடலின் எந்தப் பகுதியில் விழுந்தாலும் உடனே தலைக்கு குளித்து விட்டால் தோஷமானது ஓரளவு குறையும். அதே போல் கோவிலுக்கு செல்வதும், வீட்டிலேயே பிரார்த்திப்பதும் மன நிம்மதியை தரும்.

PALLI VILUM PALAN