பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு – Palli Vilum Palan For Women
பெண்களுக்கு பல்லி என்றாலே உள்ளூர சற்று பயமாகத்தான் இருக்கும். பூச்சிகள் என்றாலே பெண்கள் சற்று பயப்படுகிறார்கள். அதனாலேயே என்னவோ? பல்லி என்றால் கூடுதல் பயம். அது மேலே விழுந்தால் பெண்களுக்கு ஒன்றுமாகப் போவதில்லை. ஆனால் அதனால் நம் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அவர்களுக்குக் கூடுதலாகவே இருக்கிறது. எனவே பெண்களுக்காகவே இந்த சிறப்புப் பதிவு. பெண்களுடைய உடலில் எந்தெந்த இடத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்? (Lizard Falling on women head)
பொதுவாக பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு ஏதேனும் உடலில் உபாதைகள் அல்லது நோய்வாய்ப்பட்டு சிரமத்திற்கு ஆளாகலாம். அதோடு மருத்துவமனை செலவுகள் ஏற்படலாம்.
பெண்களின் உச்சந்தலையில் பல்லி விழுந்தால் பலன் என்ன?
பொதுவாகவே பெண்களின் உச்சந்தலையில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு மரணத்தை ஒட்டிய ஒரு கெட்ட நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று பல்லியானது எச்சரிக்கிறது என்று அர்த்தம் ஆகும்.
பெண்களின் வலது கண்ணில் பல்லி விழுந்தால் பலன் என்ன?
பெண்களின் வலது கண்ணில் பல்லியானது விழுந்தால் அவர்களுக்கு தேவையில்லாத மனச்சோர்வு மன உளைச்சல் மன அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அர்த்தமாகும்.
பெண்களின் இடது கண்ணில் பல்லி விழுந்தால் பலன் என்ன?
பெண்களின் இடது கண்ணில் பல்லி விழுந்தால் அவர்களது மன வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்று அர்த்தம் ஆகும்.

பெண்களின் வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் பலன் என்ன?
பெண்களின் வலது கன்னத்தின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கும் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கோ அல்லது அவர்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கோ ஆண் குழந்தை பிறக்கப் போவதை குறிக்கும்.
பெண்களின் வலது காதின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On the Right Ear Tamil)
பெண்களின் காதின் மீது அதாவது வலது காதின் மீது பல்லி ஆனது விழுந்தால் அவர்களது வீட்டில் செல்வ வளமானது பெருகும் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் நிதி நிலைமை உயரும்.
பெண்களின் மேல் உதட்டின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Upper lip Effect)
உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கப் போகிறது என்பதை உதட்டின் மீது பல்லி விழுவதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் கீழ் உதட்டின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Lower lip Effect)
உங்கள் வீட்டில் புதிய பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்றும் புதிய பொருட்கள் வாங்குவதற்கான பணவரவுகள் உங்களைத் தேடி வரும் என்பதையும் கீழ் உதட்டின் மீது பல்லி விழுந்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் முதுகின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? – Lizard Falling On Back Benefits
பல்லியானது பெண்களின் முதுகுப் பகுதியில் விழுந்தால் அவர்களின் வீட்டிற்கு இழவு செய்தி எனும் மரண செய்தி ஆனது வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பெண்களின் நகங்களின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Nails Benefits)
பெண்களின் வலது பக்க கைவிரல்களில் உள்ள நகங்களில் பல்லியானது விழுந்தால் பண இழப்பு ஏற்படும் என்றும் அதுவே பெண்களின் இடது பக்க கைவிரலில் உள்ள நகங்களில் பல்லியானது விழுந்தால் பணம் சேரும் என்று அர்த்தமாகும்.
பெண்ணின் வலது கைகளின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Hands Benefits)
பல்லியானது பெண்களுக்கு வலது கைகளில் விழுந்தால் அவர்களுக்கு வரவேண்டிய கடன் தொகை அல்லது கொடுத்திருந்த பணம் திரும்பி வராமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
பெண்களின் இடது கைகளின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் ? – Lizard Falling On Left Hands Benefits
மனச்சோர்வு மனக்குழப்பம் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவை பல்லியானது பெண்களின் இடது கைகளில் விழுந்தால் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
பெண்ணின் விரல்களின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Fingers Benefits)
ஆடைகளும் ஆபரணங்களும் விலை உயர்ந்த பொருட்களும் வாங்க வாய்ப்புகள் இருக்கும்.
பெண்ணின் வலது தோள்பட்டையின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Right shoulder Benefits)
வலது தோள்பட்டையில் பல்லி விழுவதன் மூலமாக காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின்பு அந்த காதலானது மிகவும் வலுப்பெறலாம்.
பெண்ணின் தொடையின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Thigh Benefits)
மங்களகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான செய்திகள் அவர்களின் செவிகளுக்கு எட்டப் போகிறது என்று பல்லிகள் சொல்லுகின்றன.
பெண்ணின் முழங்காலின் மீது பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On knee Benefits)
முழங்காலின் மீது பல்லிகள் விழுந்தால் பெண்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து அன்பு அதிகமாக கிடைக்கப் போகிறது என்று அர்த்தம் ஆகும்.
பெண்களின் மூட்டுப் பகுதியில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Leg joint Benefits)
மூட்டுப் பகுதியில் பெண்களுக்கு பல்லி விழுந்தால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். அல்லது ஏதேனும் பிற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.
பெண்ணின் வலது கால்களில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On the right leg Benefits)
பெண்களுக்கு வலதுபுற கால்களின் மீது பல்லியானது விழுந்தால் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் முயற்சிகளில் அவர்களுக்கு பழுதொரு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
பெண்களின் கால் விரலில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On the toes Benefits)
பெண்களுக்கு கால்களின் விரல்களின் மீது பல்லிகள் விழுந்தால் அவர்களுக்கு ஆண் வாரிசு பிறக்க போகிறது என்பதை பல்லிகள் உணர்த்துகிறது.
பெண்களின் கெண்டைக்கால் பகுதியில் பல்லி விழுந்தால் பலன் என்ன? (Lizard Falling On Carp leg)
பெண்களுக்கு கெண்டைக்கால் பகுதியில் பல்லி விழுவதன் மூலமாக அவர்களுக்கு விருந்தினர்கள் மற்றும் தூரத்து உறவுகள் விருந்தாளிகளாக வாசம் செய்யப் போகிறார்கள் என்று அர்த்தமாகும்.