ஒரு வீடு அனைத்து பஞ்சாங்கங்களின்படியும் கட்டப்பட்டிருந்தால் அதோடு அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல எண்ணங்களோடும் தூய்மையான மனதோடும் வாழ்ந்து வந்தால் அவர்களது வீட்டில் பல்லியானது வாசம் கொள்ளும், வாழும் என்பது ஐதீகமாகும். நாம் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல்லியானது திடீரென சத்தம் போடும். அதை எல்லோரும் நல்ல சகுனமாகவே பார்ப்பார்கள். ஏன் என்றால் பல்லிகள் இறைவனுக்குச் சமமானவை. அதனால் பல்லிகள் இடும் சத்தமானது ஏதோ ஒரு நல்லதையோ அல்லது கெட்ட நேரத்தையோ குறிப்பிடுவது என்பது உண்மையாகும். அப்படியே நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள்.
அதேபோல் பல்லி சத்தமிட்டாலே அது நல்ல நேரமாக தான் இருக்கும் அல்லது அந்த செயல் வெற்றிகரமாக தான் நடக்கப்போகிறது என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் பல்லியின் சத்தம் என்பது பல்வேறு விதமான அர்த்தங்களை உள்ளடக்கியது அது என்னென்ன என்பதையும் பல்லியானது எந்த இடத்தில் இருந்து சத்தமிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருக்கிறோம்.
பல்லி சத்தமிடுவதை கணிப்பதற்கு முன்பு நீங்கள் எந்த இடத்தில் நிற்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து கிழக்கு திசையிலிருந்து பல்லி ஆனது சத்தமிட்டால் என்ன பலன் என்பதை நாம் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லியானது கிழக்கு திசையில் இருந்து சத்தமிட்டால் அதாவது நீங்கள் ஏதாவது ஒரு செயலை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிழக்கு திசையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையில் சத்தமிட்டால் அந்த செயலை செய்து முடிப்பதற்கு உங்களுக்குள் பயமானது உருவாகும் என்று அர்த்தமாகும். அதுவே திங்கட்கிழமை சத்தமிட்டால் நீங்கள் செய்யப்போகும் செயலில் இருந்து உங்களுக்கு அதீத லாபம் கிடைக்கும் அல்லது நல்ல முறையில் நடைபெறும் என்பதைக் குறிக்கும். செவ்வாய்க்கிழமை கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் நல்லதும் கெட்டதும் சரி பங்காக நடக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தமாகும். அதேபோல் புதன்கிழமை கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த செயலில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்று அர்த்தமாகும். வியாழக்கிழமை கிழக்கு திசையில் இருந்து சத்தமிட்டால் அசுப நிகழ்வுகள் நடக்கும் என்பதை குறிக்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் சுபச் செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தமாகும்.

வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி ஆனது ஞாயிற்றுக்கிழமை சத்தமிட்டால் அது நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் செயலில் தீமையான விளைவுகள் வரும் என்பதை குறிக்கும். திங்கட்கிழமை தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் வீட்டில் கலகமானது ஏற்படும் என்று அர்த்தமாகும். செவ்வாய்க்கிழமை தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் சுப மற்றும் லாபகரமாக இருக்கும் என்று அர்த்தமாகும். புதன்கிழமை கை நிறைய லாபம் என்றும் வியாழக்கிழமை உங்கள் உழைப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும் என்றும் வெள்ளிக்கிழமை நீங்கள் செய்யும் செயலில் திருப்தி கிடைக்கும் என்றும் சனிக்கிழமை பெரும் செல்வமானது நீங்கள் செய்ய போகும் செயலால் கிடைக்கும் என்றும் அர்த்தமாகும்.
நீங்கள் ஒரு செயலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது வீட்டில் தெற்கு திசையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பல்லி சத்தமிட்டால் அந்த செயலில் இருந்து உங்களுக்கு சுகமானது கிட்டும் என்று அர்த்தமாகும். அதுவே திங்கட்கிழமை தெற்கு திசையில் இருந்து பல்லி ஆனது சத்தமிட்டால் உங்களுக்கு அந்த செயல் மூலமாக பகை வந்து சேரும் என்று அர்த்தமாகும். செவ்வாய்க்கிழமை பல்லி ஆனது தெற்கு திசையில் இருந்து சத்தமிட்டால் அந்த செயலை பற்றிய நினைவுகள் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும் என்று அர்த்தமாகும். புதன்கிழமை தெற்கு திசையில் இருந்து பல்லி ஆனது சத்தமிட்டால் நீங்கள் அந்த செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அர்த்தமாகும். வியாழக்கிழமை தெற்கு திசையில் இருந்து பல்லியானது சத்தமிட்டால் உங்களுக்கு போதுமான அளவு லாபம் கிடைக்கும் என்று அர்த்தமாகும். வெள்ளிக்கிழமை தெற்கு திசையில் இருந்து பல்லியானது சத்தமிட்டால் கை நிறைய லாபம் கிடைக்கும் என்றும் சனிக்கிழமை பல்லியானது தெற்கு திசையில் இருந்து சத்தமிட்டால் முருகனின் இராஜ அலங்காரத்தை பார்ப்பதற்கு ஏற்ற அளவு நன்மைகள் நடக்கும் என்றும் அர்த்தமாகும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் போதுமான அளவு லாபம் கிடைக்கும் என்று அர்த்தமாகும். திங்கட்கிழமை தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் நீங்கள் செய்யும் செயலின் மூலம் உங்களுக்கு பகை உண்டாகும் என்றும் செவ்வாய்க்கிழமை தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் எதிரியை நீங்கள் சம்பாதிப்பீர்கள் என்றும் புதன்கிழமை தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் கொஞ்சம் கஷ்டமான நாளாக இருக்கும் என்றும் வியாழக்கிழமை தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் வெள்ளிக்கிழமை தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் நல்ல செய்திகள் செவிகளுக்கு எட்டும் என்றும் சனிக்கிழமை தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் ரோகம் உண்டாகும் என்றும் அர்த்தமாகும்.
மேற்கு திசையில் ஞாயிற்றுக்கிழமை பல்லி ஆனது சத்தமிட்டு உங்களுக்கு உணர்த்தினால் அன்று வீட்டில் சண்டைகள் அதிகமாகும் என்றும் திங்கட்கிழமை மேற்கு திசையில் சத்தமிட்டால் உங்கள் பார்வையில் வெற்றி கிட்டும் என்றும் செவ்வாய்க்கிழமை மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்க அனுகூலமான நாளாக இருக்கும் என்றும் புதன்கிழமை மேற்கு திசையில் சத்தமிட்டால் நினைத்த காரியத்தை முடிப்பதற்காக பயணப்படுவீர்கள் என்றும் அர்த்தமாகும். வியாழக்கிழமை மேற்கு திசையில் சத்தமிட்டால் நீங்கள் நினைத்த காரியத்தால் நஷ்டம் ஏற்படும் என்றும் வெள்ளிக்கிழமை செய்யப் போகும் காரியத்தால் மிக நல்ல செய்திகள் செவிகளுக்கு கிடைக்கும் என்றும் அர்த்தமாகும். சனிக்கிழமை ரோகம் கிடைக்கும் என்றும் அர்த்தமாகும்.

வடமேற்கு திசையில் ஞாயிற்றுக்கிழமை பல்லி ஆனது சத்தமிட்டால் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அல்லது நினைத்துக் கொண்டிருக்கும் காரியத்தில் நீங்கள் வெறும் மேலோட்டமாக பார்க்கிறீர்கள் என்று அர்த்தமாகும். திங்கட்கிழமை வடமேற்கு திசையில் பல்லி ஆனது சத்தமிட்டால் தீய நிகழ்வுகள் நடக்கும் என்றும் செவ்வாய்க்கிழமை வடமேற்கு திசையில் சத்தமிட்டால் நினைத்த காரியங்களுக்காக தூர தேசங்கள் பயணிப்பீர்கள் என்றும் அர்த்தம் ஆகும். புதன் கிழமை கையில் இருக்கும் பொருள் கரையும் என்றும் வியாழக்கிழமை நினைத்த காரியத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும் என்றும் வெள்ளிக்கிழமை வடமேற்கு திசையில் இருந்து சத்தமிட்டால் நினைத்த காரியத்தால் வீட்டில் கலகம் பிறக்கும் என்றும் சனிக்கிழமை அன்று திடமான முடிவு எடுத்தீர்கள் என்றும் அர்த்தம் ஆகும்.
வடக்கு திசையில் பல்லி ஆனது ஞாயிற்றுக்கிழமைகளில் சத்தமிட்டால் செல்வம் வந்து சேரும் என்றும் திங்கட்கிழமை அன்று வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் மேலோட்டமான ஒரு பார்வையாகவே அந்த செயல் இருக்கும் என்றும் செவ்வாய்க்கிழமைகளில் சத்தமிட்டால் நீங்கள் நினைத்த காரியங்களில் எதிரிகள் அதிகமாக இருப்பதை குறிக்கும். புதன்கிழமை சப்தமிட்டால் கலகம் உண்டாகும் என்பதையும் வியாழக்கிழமை சத்தமிட்டால் நினைத்த காரியம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் வெள்ளி க்கிழமைகளில் வடக்கு திசையில் சத்தமிட்டால் வீட்டில் கூச்சல் குழப்பம் கலகம் ஏற்படும் என்றும் சனிக்கிழமை சத்தமிட்டால் நினைத்த காரியத்தால் நல்ல செய்திகள் கிட்டும் என்றும் அர்த்தமாகும்.

வடகிழக்கு திசையில் பல்லியானது சத்தமிட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல லாபம் கைக்கு கிடைக்கும் என்றும், செவ்வாய்க்கிழமைகளில் கல்யாண வைபோகம் போல மகிழ்ச்சிகரமான செய்திகள் கிட்டும் என்றும் புதன்கிழமை வடகிழக்கு திசையில் பல்லியானது சத்தமிட்டால் எடுத்த காரியத்தில் தோல்வியே கிடைக்கும் என்றும், வியாழக்கிழமை சத்தமிட்டால் போதுமான அளவு வெற்றி கிட்டும் என்றும் வெள்ளிக்கிழமை அன்று வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் எதிரிகளால் ஐயம் கொள்ள வேண்டும் என்றும் சனிக்கிழமையன்று சத்தமிட்டால் துரோகிகள் சூழ்ந்து நீங்கள் பயம் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும்.
பூமியின் தரைப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லி சத்தமிட்டால் எடுத்த காரியம் அல்லது நினைத்த காரியம் படுதோல்வி என்றும் திங்கட்கிழமைகளில் பல்லி ஆனது சத்தமிட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் செவ்வாய்க்கிழமைகளில் சத்தமிட்டால் மிகுந்த லாபம் கிடைக்கும் என்றும் புதன்கிழமைகளில் சத்தமிட்டால் கை நிறைய லாபம் கிடைக்கும் என்றும் வியாழக்கிழமை சத்தமிட்டால் நஷ்டம் ஏற்படும் ஒன்றும் வெள்ளிக்கிழமை சத்தமிட்டால் மிகவும் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும் என்று அர்த்தமாகும். சனிக்கிழமை நினைத்த காரியம் நடக்கும் என்று அர்த்தமாகும்.
பல்லியானது தலைக்கு மேலே வீட்டின் மேற்கூரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சத்தமிட்டால் நிச்சயம் நிறுத்த காரியத்திலும் நினைத்த காரியத்திலும் வெற்றி வாகை சூடலாம் என்றும் திங்கட்கிழமைகளில் ஐயம் கொள்ள வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமைகளில் நினைத்த காரியங்களுக்காக இன்னும் பயணப்பட வேண்டும் என்பதையும் புதன்கிழமைகளில் நற்செய்திகள் கிடைக்கும் என்பதையும் வியாழக்கிழமை வீட்டில் குழப்பம் கூச்சல் கழகம் ஏற்படும் என்பதையும் வெள்ளிக்கிழமைகளில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதையும் சனிக்கிழமையில் தலைக்கு மேலே வீட்டின் கூரையின் மேல் பல்லியானது சத்தமிட்டால் கெட்ட சகுனம் என்றும் நினைத்த காரியம் நடக்காது என்றும் அர்த்தமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல்லி எந்த இடத்தில் எந்த நேரத்தில் சத்தமிட்டது என்பதையும் கணித்து உங்களுக்கான பலனை இந்த பதிவில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.